tamiltraditional.cf

Home | Sign Up | Log In
ஞாயிறு, 2024-05-19, 11:15 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி [ Add new entry ]

Entries in section: 111
Shown entries: 41-50
Pages: « 1 2 3 4 5 6 7 ... 11 12 »

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது.

* தானாக முன் வந்து செய்யும் உதவிக்கு ஈடான செயல் இரு உலகங்களிலும் அரிது.

திருக்குறள் | Views: 422 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

* ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

திருக்குறள் | Views: 320 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

* இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

திருக்குறள் | Views: 487 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

* உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

திருக்குறள் | Views: 402 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பெறு அல்ல பிற.

* அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.

 

திருக்குறள் | Views: 484 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

* இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

திருக்குறள் | Views: 476 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

* பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

திருக்குறள் | Views: 405 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

* சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்க கூடிய வழி வேறென்ன இருக்கிறது.

திருக்குறள் | Views: 457 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

* ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

திருக்குறள் | Views: 476 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

11. வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

* உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

திருக்குறள் | Views: 481 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz