அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால்,
நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே
வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை
பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும்
தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த
பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்.
முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில்
கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28
நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம்
உதிர மாதக் கணக்கில் ஆகும்.
நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்