tamiltraditional.cf

Home | Sign Up | Log In
சனி, 2024-04-27, 4:25 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » திருக்குறள் [ Add new entry ]

மக்கட்பேறு ...See More
2012-12-28, 1:56 PM

61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பெறு அல்ல பிற.

* அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.

 

62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

* பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின் ஏரேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

 

63. தம்பொருள் என்பதன் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையாம் வரும்.

* தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

 

64. அமிழ்தினும் ஆற்ற இனிதெதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

* சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சிக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்த்தை விடச் சுவையானதாகி விடுகிறது.

 

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

* தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை முழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

 

66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

* தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

 

67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

* தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

 

68. தம்மிந்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

* பெற்றோரை காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

 

69. ஈன்ற் பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

* நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை அந்த தாய் அடைவாள்.

 

70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

* 'ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு', என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

Category: திருக்குறள் | Added by: pandu
Views: 481 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz