ர்
வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை
எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான
வார்த்தையால் அழைத்தனர். இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில்
எழும்பி வந்தது.
அதிகாலை 3 மணி அளவில் ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள்
புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில்
மிகப்பெரும்பாலானோர் இதில் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து
ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த போட் மெயில் என்று தொடருந்து சேவை
தொடர் வண்டியும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுக்கப்பட்டது. மொத்தம்
சுமார் 2000 பேர் உயிரிழந்தனர்.
தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப்
போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு
தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.
தனுஷ்கோடி நகரம்
புதிப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ
குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப்
பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.