இந்த அரண்மனையையும் மீனாக்ஷி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் எ ன்றும் கூறப்படுவதுண்டு .
, தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே வழி இருப்பதாகக் குறிப்புகள் இருக்கிறதாம்.
இங்கு கல்பீடத்தின் மீது நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடுள்ள மண்டபம் உள்ளது.அதன் நடுவில் அரியனை ஒன்று உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை மன்னன் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா நடப்பித்து அங்கு அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று வீதி உலாவாகக் கொணர்ந்து இவ்வரண்மனையில் இந்த சொர்க்க விலாஸத்தில் சிறப்பாக அலங்கரித்த அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார்.
செங்கோலுக்குச் சிறப்பாக வழிபாடுகள் வழங்கப்படும். அன்று முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும்.
மறுநாள் திருமலை மன்னர் செங்கோலுக்கு மறுவழிபாடு செய்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் அடியில் வைத்து வணங்குவது வழக்கம். அன்னையின் அடியானாக நாட்டை ஆள்வதை இது குறிக்கும்.