மனம் : இடுப்பு முதுகெலும்பு
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலின்
பக்கவாட்டைச் சுழற்றுவதற்கு சாத்தியமாகிறது. முதுகெலும்பு முழுவதும்
நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது. கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கின்றது.
முதுகுத் தண்டு நரம்பின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது. கல்லீரல்,
மண்ணீரல், கணையம், குடல்கள், சிறுநீரகப்பை ஆகியவை நன்கு அழுத்தப்படுகின்றன.
பாலணுச் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. கணைய நீர், அட்ரினலின் ஆகிய
சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. தொடைப்பகுதி வலிமை அடையும்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு
நோய், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல்
மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி,
உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச்
சுற்றியுள்ள சதையினைக் குறைக்கிறது.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை அகற்றி யோகி மத்ஸ்யெந்திரர்
என்ற மஹான் அடைந்த நிலையை அடைய உதவுகின்றது. சூட்சும நாடி திறக்கப்பட்டு
குண்டலினி சக்தி மேல் எழும்.
எச்சரிக்கை : குடல்வாயு (ஹெர்னியா நோய்) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
|