tamiltraditional.cf

Home | Sign Up | Log In
திங்கள், 2024-04-29, 0:00 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
பழமொழி [2]
பொது அறிவு [4]
விடுகதைகள் [7]
சிறுவர் கதைகள் [25]
பாப்பா பாடல்கள் [10]
சிந்தனை துளிகள் [2]
விளையாட்டுக்கள் [0]
தெரிந்து கொள்ளுங்கள் [1]
ஆங்கிலம் கற்க [0]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » சிறுவர் உலகம் » விடுகதைகள் [ Add new entry ]

விடுகதைக்கு விடை சொல்லுங்க...!
2012-12-11, 7:16 PM
1. இதயம் போலத் துடிப்பிருக்கும்
இரவு பகல் விழித்திருக்கும். -அது என்ன?

2. காவி உடை அணியாதக் கள்ளத் தவசி
கரையோரம் கடும் தவம் செய்கிறான் - அவன் யார்?

3. காண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?

4. வீதியெல்லாம் கூட வந்தாலும்
வீட்டுக்குள் இவனைச் சேர்ப்பதில்லை - அவன் யார்?

5. காய் காய்க்கும். ஆனால்
பழம் பழுக்காத மரம் இது. - அது என்ன?

6. மண்ணுக்குள் முளைக்கும்
மங்கையருக்கு மட்டும் அழகு தரும். -அது என்ன?

7. விதையில்லாத செடி இது மழையில் பிறந்து
வெயிலில் காயுது. - அது என்ன?

8. இரவல் கிடைக்காதது
இரவில் மட்டும்தான் வரும். -அது என்ன?

9. பறந்து போகும் விமானம் அல்ல
படீரென வெடிக்கும் பட்டாசும் அல்ல. -அது என்ன?

10. குழந்தைக்குப் பலமான கையே
இந்தக் கைதான். - அது என்ன?

விடைகள்:

1. கடிகாரம்.

2. கொக்கு.

3. புகை.

4. செருப்பு.

5. முருங்கை மரம்.

6. மஞ்சள்.

7. காளான்.

8. தூக்கம்.

9. பலூன்.

10. அழுகை.

Category: விடுகதைகள் | Added by: pandu
Views: 775 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz