tamiltraditional.cf

Home | Sign Up | Log In
புதன், 2024-05-08, 5:48 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
பழமொழி [2]
பொது அறிவு [4]
விடுகதைகள் [7]
சிறுவர் கதைகள் [25]
பாப்பா பாடல்கள் [10]
சிந்தனை துளிகள் [2]
விளையாட்டுக்கள் [0]
தெரிந்து கொள்ளுங்கள் [1]
ஆங்கிலம் கற்க [0]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » சிறுவர் உலகம் » விடுகதைகள் [ Add new entry ]

சிறுவர் விடுகதைகள் ... மேலும்
2012-12-11, 7:11 PM

1. மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல
    பட்டை தீட்டியிருப்பான்; சாமியார் அல்ல - அவன் யார்?


2. கறுத்த ரோஜா மொட்டு, கனத்த மேகம் கண்டு
    கணத்தில் இதழ் விரித்திடும், காத்திடும் பின் சாய்ந்திடும் - அது என்ன?


3. நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அவை எவை?

4. பார்த்தவர் இருவர், எடுத்தவர் ஐவர், உண்டவரோ ஒருவர் - அவர்கள் யார்?

5. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
    கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
    வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை - அவன் யார்?


6. ஊளையிட்டாலும் ஊரைச் சுமந்து செல்வான் - அவன் யார்?

7. கல்லிலே காய்க்கும் பூ;
    காய்ந்தால் மலரும் பூ:
    பூவிலே இது வெள்ளைப்பூ. - என்ன பூ?


8. எண்ணெய் இல்லை; திரியும் இல்லை
    ஏற்றி வைக்க ஆளும் இல்லை
    ஆனாலும் தெரியுது வெளிச்சம். - அது எது?


9. கருப்பு நிறமுடையவன்
    கபடம் அதிகம் கொண்டவன்
    கூவி அழைத்தால் வந்திடுவான்
    கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் - அவன் யார்?


10. அரிசி போல் பூ பூக்கும்.
     அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?


 

விடைகள்:

 

1. அணில்

2. குடை

3. விக்கல், உப்புக்கல், கறுக்கல்.

4. கண்கள், விரல்கள், நாக்கு.

5. சிலந்தி

6. தொடருந்து

7. சுண்ணாம்பு

8. சூரியன்

9. காகம்

10. மிளகாய்


- சித்ரகலா செந்தில்குமார்.

 

Category: விடுகதைகள் | Added by: pandu
Views: 13015 | Downloads: 0 | Rating: 2.7/7
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz