tamiltraditional.cf

Home | Sign Up | Log In
செவ்வாய், 2024-04-23, 6:48 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
sirugudi news [0]
kkp news [1]
daily news [1]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Articles » kkp news

தமிழ்நாட்டின் உணவுக்கும், உபசரிப்புக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் அழகிய ஊர்த்தான் கட்டுக்குடிபட்டி
தமிழ்நாட்டின் உணவுக்கும், உபசரிப்புக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் அழகிய ஊர்த்தான் கட்டுக்குடிபட்டி. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளளின் பரம்புமலையின் அடிவாரத்தில் அமைந்த அற்புத கிராமம் தான் கட்டுக்குடிப்பட்டி.

 

என்ன இல்லை இத்திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் அயல் நாட்டில் என்ற பொன்மொழிக்கு உதாரணாமாய் விளங்கும் அபூற்வ கிராமம்.

 

பொதுவாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு அடையாளம் அல்லது தனி சிறப்பு இருக்கும். ஆனால் எங்கள் ஊரில் அனத்தும் சிறப்பே.

முதலில் கட்டுக்குடிபட்டியின் புவியியல் அமைப்பை பார்ப்போம்.
பூமியின் நில அமைப்பை ஐந்து வகையாக பிரிப்பார்கள், அவை

குறுஞ்சி - மலையும் மலை சார்ந்த இடம்
முல்லை - காடும் காடு சார்ந்த இடம்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடம் (விவசய நிலங்கள்)
நெய்தல் - நீரும் நீர் சார்ந்த இடம்
பாளை - ஒன்றுக்கும் உதவாத இடம்

மேல் குறிப்பிட்டுள்ள ஐந்து வகைகளில் பாலையை தவிற மற்ற நான்கும் கட்டுகுடிபட்டியில் உள்ளது. இந்த மாதிரி அமைப்பு வேறெங்கும் கான முடியாது.
ஆண்டின் அனைத்து மாதங்களிலும் தண்ணிர் இருக்கும். மழை காலங்களில் இவ்வூர் ஒரு தீபகற்பம் போல் காட்சியளிக்கும். இங்கு மொத்தம் 9 நீர் நிலைகள் உள்ளது. கிழக்கில் மளனிக்கம்மாயும், மேற்கில் ரெட்டையன் கம்மாயும், பெரமங்குளமும், புதுவயல் கம்மாயும், தெற்கில் கனக்கன் கம்மாயும், வடக்கில் கொல்லம் கம்மாயும், செட்டிய குளமும், சூத்தயன் கம்மாயும் சூழ்ந்துள்ளது.

இவ்வூரின் மற்றும் ஒரு சிறப்பு, மலை அல்லது குன்றின் மீது இருந்து பார்த்தால் ஊரில் ஒரு வீடும் முழுமையாக தெரியாது, காரணம் அடர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள்.

இவ்வூரில் மூன்று வழிகள் உள்ளது, தெற்கு வழியாக வந்தால் மலை பிரயாணம் மூலமாக வந்தால் முதலில் வயலும் பின் தென்னந்தோப்பும் அன்புடன் வரவேற்கும். வடபுரத்தில் இருந்து வந்தால் அழகான நீர் நிலைகள் இருபுரமும் வரவேர்க்கும். மேற்கு வழியில் பனை மரங்களும் தென்னை மரங்களும் வரவேற்கும்.

இங்கு விழையும் காய்கரிகள் இயற்கையாகவும் சுவையாகவும் இருக்கும் என்பது சுற்றுவட்டாரத்தின் பேச்சு.

இவ்வூரின் மிகவும் முக்கியமான சிறப்பு அங்கு அமைந்துள்ள ஸ்ரீ செல்வவினாயகர் ஆலயம். வினாயகர் பல விதமாக பல தோற்றத்துடன் பார்த்திருப்பீர்கள். உலகிலே வினாயகர் சித்தர் வடிவாக அமைந்தது கட்டுக்குடிபட்டியில் தான்.

கண்மூடி ஆழ்ந்த நிலையில் நீங்கள் ஸ்ரீ செல்வவினாயகருடன் பேசலாம். இதை நன்கு உணர்வீர்கள். வேரேங்கும் இல்லாத மற்றுமோர் சிறப்பு, வினாயகரின் வலது கை பக்கம் (தெற்கு பக்கம்) அரசமரம் அமைந்துள்ளதும், கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு பக்கம் நீர் நிலை அமைந்துள்ளது.

தமிழக சுற்றுழா வளர்ச்சி துரைக்கு இவ்விடம் மிகவும் பொருத்தமான இடம். இவ்வூரின் திருவிழா சித்திரை மாதம் மூன்றாவது ஞாயிரு மற்றும் திங்கள் கிழமைகளில் நடைபெரும்.

இத்திருவிழா தொடங்கும் 15 நாள் முதல் இரவு 9.00 மனிக்கு தினமும் கும்மி அடிப்பார்கள். இது பாரம்பரியமாய் தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்து ஸ்ரீ செல்வ வினாயகர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ வெள்ளையம்மா ஆலயம், ஸ்ரீ வடக்கியாத்தா ஆலயம் மற்றும் ஸ்ரீ பொய் சொல்ல அய்யனார் ஆலயமும் உள்ளது.
Category: kkp news | Added by: pandu (2017-03-13)
Views: 466 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz