tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2024-04-19, 6:58 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
பழமொழி [2]
பொது அறிவு [4]
விடுகதைகள் [7]
சிறுவர் கதைகள் [25]
பாப்பா பாடல்கள் [10]
சிந்தனை துளிகள் [2]
விளையாட்டுக்கள் [0]
தெரிந்து கொள்ளுங்கள் [1]
ஆங்கிலம் கற்க [0]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » சிறுவர் உலகம் » பொது அறிவு [ Add new entry ]

கணிதம்...See More
2013-04-18, 3:32 PM

எண் வினா விடை
1.ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு?135 டிகிரி
2. அரை வட்டத்தில் அமையும் கோணம்? நேர்கோணம் 
3. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? விரி கோணம் 
4. பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? குறுங்கோணம் 
5. ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்? கனசதுரம் 
6. ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் ____________? கன அளவு 
7. முதல் 10 இயல் எண்களின் சராசரி? 5.5 
8. -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி? 0 
9.5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண்? 40 
10. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் ___________ ஆகும்? சாய்சதுரம் 
11. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர்? பிரம்ம புத்திரா 
12. வடிவியலின் அடிப்படைக் கருத்து ____________ ஆகும்? புள்ளி 
13. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை? கூம்பு 
14. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ____________ ஆகும்? ஐங்கோணம் 
15. முக்கோணத்தின் வகைகள் எத்தனை? 
16. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் ___________ என்கிறோம்? வில் 
17. நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் _____________ ஆகும்? வட்டம் 
18. வடிவியலின் தந்தை என்று போற்றப்படுபவர்? ரிண்ட் பாப்பிதரஸ் 
19. அரைக்கோணத்தின் புறப்பரப்பு? 3πr2 
 20.360 டிகிரி என்பது ______________ ரேடியன்கள்? 2 π 

எண் வினா விடை
21.1000 கி.கி என்பது?1 டன்
22. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் ________________ எனப்படும்? தகா பின்னங்கள் 
23. ஒன்றை விடக் குறைவான பின்னம்? தகு பின்னம் 
24. 3/5 என்பது எவ்வகைப் பின்னம்? தகு பின்னம் 
25. 4/7-ன் சமான பின்னம்? 16/28 
26.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை ______________ என்பர்? சமான பின்னம் 
27. 0.50 என்பது ஒரு ___________ பின்னம்? தகு பின்னம் 
28. பின்வருவனவற்றுள் இரட்டைப் பகா எண் எது?
1, 2, 8, 10
 
29. வகு எண் 15, ஈவு 4 மற்றும் மீதி 2 எனில் வகுபடும் எண்? 62 
30. 4325-ன் விரிவுக் குறியீடு? 4000+300+20+5 
31. எண்களை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்துவது? ஏறுவரிசை 
32. சிறிய முள் 6 மணியிலிருந்து 7 மணிக்கு வர பெரிய முள் எத்தனை முறை சுற்ற வேண்டும்? 60 
33. 4, 6, 9, 2 ஆகிய இலக்கங்களைக் கொண்டு அமைக்கப்படும் மிகப்பெரிய எண்? 9642 
34. எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல் ____________ என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? நேப்பியர் 
35. வகுத்தல் என்பது ___________ செயலின் எதிர்ச் செயல்? பெருக்கல் 
36. மெட்ரிக் அளவைகளின் தந்தை என போற்றப்படுபவர்? காப்ரியல் மெளடன் 
37. திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு? தப்படி 
38. 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க ____________ என்ற அலகு பயன்படுகிறது? கன செ.மீ 
39. 1 பாகை என்பது? 60 கலைகள் 
40. 1 மில்லினியம் என்பது? 1000 ஆண்டுகள் 

எண் வினா விடை
41.திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை?வெக்டர் அளவைகள்
42. 10.25 பி.ப எனில் ரயில்வே நேரம்? 22.25 மணி 
43. கடிகாரத்தில் நிமிடமுள் 10ம் எண்ணிலிருந்து 12ம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள்? 600 
44. ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்? மடங்குகள் 
45. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே _____________ எனப்படும்? காரணிகள் 
46. ஓர் எண்ணை அனைத்து _____________ அந்த எண்ணை மீதியின்றி வகுக்கும்? காரணிகள் 
47. ________________ ஆம் ஆண்டு அளவியல் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்டது? 1670 
48. ஒரு நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது _____________? எண்கோடு 
49. கொள்ளளவின் குறைவான அளவை ______________ அலகில் அளக்கிறோம்? மி.லி. 
50. மி.மீ ஐ செ.மீ ஆக மாற்ற கொடுக்கப்பட்ட அளவை ________ வகுக்க வேண்டும்? 10 
51. அடிப்படைச் செயல்களில் கடினமான பகுதி என மாணவர்களால் உணரப்படும் செயல்? வகுத்தல் 
52. ஒரு நாற்கரத்தில் ஒரு ஜோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருப்பின் அந்த நாற்கரம் ________________ எனப்படும்? சரிவகம் 
53. ___________________ எனும் கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் முதன் முதலில் முக்கோணவியல் விகித அட்டவணையை கட்டமைத்து முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு வித்திட்டார்? ஹிப்பார்கஸ் 
54. ஒரு நேர்கோடு ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரண்டு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விறு கோடுகளையும் ___________ ஆகப் பிரிக்கும்? சமவிகிதம் 
55. Ø>90 டிகிரி என்பது? விரிகோணம் 
56. ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. அதே இடத்திற்கு 60 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் அவர் பயண நேரம் எவ்வளவு? 
57. நாற்று நடும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் நிரல், நிரை அமைப்பில் நடுகின்றனர். இங்கு ____________ என்ற கணிதக் கருத்துப் பயன்படுகிறது? அணி 
58. GEOMETRY என்ற வார்த்தை ______________ வார்த்தைகளால் உருவானது? கிரேக்கம் 
59. ________________ முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தினர்? பாபிலோனியர் 
60. கிரேக்க கணித மேதை ___________________ என்பவர் வடிவியலின் தந்தை ஆவார்? யுக்னிட் 

எண் வினா விடை
61.புள்ளி, கோடு, தளம் ஆகிய மூன்றும் சேர்ந்து ___________________ எனப்படுகிறது?வடிவியல்
62. எண்ணிலடங்கா புள்ளிகளின் தொகுப்பை ________________ என்கிறோம்? கோடு 
63. ஒரு கோட்டுத்துண்டில் இரு முடிவுப் புள்ளிகள் உள்ளதால் அதற்கு குறிப்பிட்ட _____________ உண்டு? நீளம் 
64. மூடிய உருவத்தைப் பெற வேண்டும் எனில் குறைந்தபட்சம் ________________ கோட்டுத் துண்டுகள் இருக்க வேண்டும்? 
65. மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைப்பட்ட (அ) மூடிய உருவத்தை ________________ என்கிறோம்? முக்கோணம் 
66. ஒரு முக்கோணத்தின் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை விட _________________ இருக்கும்? அதிகமாக 
67. ஐந்து (அ) ஐந்திற்கு மேற்பட்ட கோட்டுத்துண்டுகளால் உருவாகும் அடைபட்ட உருவத்தினை ________________ என்கிறோம்? பலகோணம் 
68. ________________ வடிவங்கள் என்பது ஒரு தளத்தில் அடைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ஆகும்? முப்பரிமான 
69. ஒரே சீரான வளைக்கோட்டினால் ஆன மூடிய வடிவம் _____________ ஆகும்? வட்டம் 
70. வடிவங்கள் என்பது ________________ உருவங்கள் ஆகும்? சமதள 
71. 2, 5, 10 ஆகிய எண்களின் வகுபடும் தன்மையைக் காண என்ன செய்ய வேண்டும்? கடைசி இலக்கத்தை ஆராய வேண்டும் 
72. நான்கு இலக்க மிகப்பெரிய எண் மற்றும் மிகச்சிறிய எண் இவற்றின் கூடுதல்?10999 
73. ஒரு உலோகக்கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது எனில் 20 கி.கி உலோகக்கலவையில் உள்ள நிக்கலின் அளவு? 6 கி.கி. 
74. இராஜூ ரூ.36000 க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி அதன் தோற்றப்பொலிவு நன்கு அமையவும், நன்முறையில் இயங்கவும் சில பாகங்களைப் பொருத்தி அதனை 10% இலாபத்திற்கு ரூ.44000 விற்றார் எனில் அவர் செய்த இதர செலவினத் தொகை? 4000 
75. 6 ஆட்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் வேலை முடிய ஆகும் நாட்கள்? 20 
76. "மூன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற தள்ளுபடி விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி சதவீதம்? 33.33 
77. 68, 75, 70, 62, 75, 71, 69 இவ்விவரங்களுக்கு சராசரி மற்றும் இடைநிலை சமம். சரியா? தவறா? சரி 
78. ஒரு தனியார் நிறுவனம் தனது விளம்பர அறிக்கையில் அவர்களது சேவையானது சராசரியாக 99% வாடிக்கையாளர்களால் மிகவும் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளனர் என அறிவிக்கிறது எனில் அவ்வறிக்கையில் குறிப்பிட்ட மையப்போக்கு அளவு? முகடு 
79. 10 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு (மி.மீ. ல்) பின்வருமாறு: 0.8, 1.5, 4.2, 0.8, 0.8, 3.2, 2.5, 1.5, 0.2, 4.4 இவ்விவரங்களிலிருந்து மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய மதிப்பினை நீக்கிவிட்டால் சராசரி மாற்றமடையும் ஆனால் இடைநிலை, முகடு மாறாது. சரியா? தவறா? சரி 
80. ஒரு கலனில் 20 லிட்டர் பெட்ரோல் உள்ளது. கசிவின் காரணமாக 3 லிட்டர் பெட்ரோல் வீணாகிறது எனில் கலனில் மீதமுள்ள பெட்ரோல் அளவின் சதவீதம்? 85 




கணிதம்

Category: பொது அறிவு | Added by: pandu
Views: 4121 | Downloads: 0 | Comments: 2 | Rating: 1.6/7
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz