tamiltraditional.cf

Home | Sign Up | Log In
ஞாயிறு, 2018-12-16, 2:31 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » மருத்துவ குணம் [ Add new entry ]

ஆவாரை - ஆவரசு ...See More
2013-03-20, 4:30 PM
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ !
இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .

இது ஒரு காய கலப்ப மூலிகை .
மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது.  இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள், பூ, கிளைகள், காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.

இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் .
இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும்.
சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து  வர உடல் தங்கம் போல் ஆகும்.
இது ஒரு மொத்த  மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்,

நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கிழை  நாட்டு வைத்திய தத்துவும்.இந்த செல்களில் இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன.

இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை .பின் என்றும் இளமைதான்.
இவைகளையே காயகல்ப்ப மூளிகள் என நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .எனவே அவர்கள் கூறும் காயபலப்ப மூலிகைகளை மட்டுமாவது தொடர்ந்து எதோ ஒரு தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று, நோயின் பிடியில் இருந்து தப்பி வாழலாம் மண்ணில் நல்ல வண்ணம் காணலாம்.

நமது வீட்டில் கழிவு நீரில் அடைப்பு ஏற்ப்பட்டு ஓடாமல் நின்றால் வீடு என்ன கதியாகும் .அதே கதிதான் செல்களில் நீக்க வேண்டிய பகுதி நீக்கப்படாவிட்டால் நடக்கிறது. இது குறித்த ஒரு ஆராச்சியின் முடிவுகள் இதோ!


மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?
இது சருமவியாதி , மூகத்தினால் வரும் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது .
ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.
பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.
இதன் பூவை இனிப்புடன் கிளறி ஹாலவா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும் .
இனி சாலை வழியே போகும் போது ஆவரையை கண்டால் விடாதீர்கள் .பூக்களை சேகரம் செய்து உபயோகியுங்கள் .இனி வரும் மழை காலத்தில் தான் மிகுதியாக கிடைக்கும் .
இது ஒரு வியாபர பயிராகவே பயிர் செய்து அதன் ethanol extract  செய்து விற்றால், வாங்க  உலகம் காத்திருக்கிறது.


Category: மருத்துவ குணம் | Added by: pandu
Views: 272 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 48
live traffic feed

Copyright MyCorp © 2018 | Make a free website with uCoz