tamiltraditional.cf

Home | Sign Up | Log In
செவ்வாய், 2024-04-23, 6:45 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » திருக்குறள் [ Add new entry ]

அருள் உடைமை
2012-12-28, 3:54 PM

241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

* பொருட்செல்வம் இழிந்தவர்களிடத்தும் உள்ளது, அதனாலே அருட்செல்வமே செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்த செல்வம்.

 

242. நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.

* நல்ல வழியிலே தேடி அந்த அருளுடனே இருக்க, பல வழிகளை கற்று தேர்ந்தாலும் அதுவே துணை இங்கே ஆற்றாள் என்பது மார்க்கம், இறைவழி என்றும் கொள்ளப்படுவதுண்டு.


243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

* அருள் கொண்ட நெஞ்சினார்கு இருள்சேர்ந்த துன்பமான உலகம் இல்லை.

 

244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

* உலகத்திலுள்ள உயிரகளை காத்து அருள்புரிபவர்க்கு இல்லை தன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டுமே என்னும் பயம்


245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி.

* இந்த வளமான உலகமே சாட்சியாகும் துன்பமானது அருள்கொண்ட மனிதருக்கு இல்லை என்பதற்கு


246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

* பொருள்நீங்கி (தான் துன்படுவதை) மறந்து வாழ்பவர் என்று கூறுப்படுபவர் யாரென்றால் அல்லாதவைகளை செய்து அருள் இல்லாமல் வாழ்பவர்களே

 

247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

* அருளில்லார்க்கு மேலுலகமும் பொருளில்லாதவர்க்கு இந்த உலகமும் இன்பமானதாய் இருக்காது

 

248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

* பொருளல்லாதவர்கள் கூட சிலநேரங்களில் செல்வம் கொழிப்பர் அருளில்லாதவர் அழிந்தவர்ளாகாமல் மீள்வது அரிது


249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

* அருளில்லாதவன் செய்யும் அறமானது ஞானமில்லாதவன் மெய்ப்பொருளை கண்டது போலாகும்


250. வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.

* ஒரு வலியவன் முன் தன் நிலைமையை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவேண்டும் எப்போதாகிலும் ஒரு மெலிவன் தன்னிடம் வரும்போது.

Category: திருக்குறள் | Added by: pandu
Views: 559 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz