tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2024-04-19, 11:48 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » திருக்குறள் [ Add new entry ]

ஒப்புரவு அறிதல்
2012-12-28, 3:50 PM
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

* மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.

 

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

* முயன்று திரட்டிய பொருள் எல்லாம் தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே.

 

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

* ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது.


214. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்.

* ஒற்றுமை போற்றுவர் தவிர மற்றவர்கள் இறந்தவர்களாகக் கருதப் படுவர்

 

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

* நீர் நிறைந்த குளம் போல், பரந்த மனம் உடையவனின் செல்வம் அனைவருக்கும் பயன்படும்.


216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

* நல்லவனின் செல்வம், மரத்தில் பழுத்த கனியைப் போல் எவருக்கும் இனிமையானது.


217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

* பெருந்தகையானவரின் செல்வம், மரம் மருந்தானது போல் முழுதும் பயன் வழங்க தவறாது


218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

* தம் கடமையை அறிந்தவர்கள் துன்பப் படும் காலத்திலும், ஒற்றுமையில் குறையாதவர்களாய் இருப்பர்.


219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

* பிறருக்கு உதவ முடியாத நிலையே நல்லவனுக்கு வறுமையாகக் கொள்ளப் படும்.


220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

* ஒற்றுமையால் வரும் கேடு எனின் ஒருவன் தன்னை விற்றும் பெற்றுக் கொள்ளலாம்

Category: திருக்குறள் | Added by: pandu
Views: 541 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz