tamiltraditional.cf

Home | Sign Up | Log In
சனி, 2024-04-20, 1:48 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » திருக்குறள் [ Add new entry ]

தீவினை அச்சம்
2012-12-28, 3:49 PM


201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

* தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.


202. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

* தீய செயல்களால் தீமையே விளையும் ஆதலால் அவை தீயினும் கொடியதாக அஞ்சுவர்

 

203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

* நம்மை வெறுத்தவருக்கும் தீமை செய்யாதிருப்பது நாம் அறிந்திருக்க வேண்டியவற்றுள் முதன்மையானது.

 

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

* மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது அப்படிச் செய்தால் அறமே அவனுக்கு கேடு விளைவிக்கும்.


205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து.

* துணை எதுவும் இல்லாதவன் என்று ஒருவனுக்கு தீயவை செய்தால், தாமே இல்லாதவனாகும் நிலை ஏற்படும்.


206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

* துன்பம் தன்னை வாட்டக் கூடாது என நினைப்பவன், பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது.


207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்

* எந்தப் பகையானாலும் மீண்டு விடலாம், தீவினையான பகை உடன் வந்து கேடு விளைவிக்கும்.


208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.

* தீயவை செய்தவருக்கு நிழல் போன்ற விலகாத கேடு சூழும்.


209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

* தன்னை நேசிப்பவன் என்றும் தீவினையை நெருங்குவதில்லை


210. அருன்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

* மதி மயங்கி தீய செயல் செய்யாதவன் கெடுதல் அரிது.

Category: திருக்குறள் | Added by: pandu
Views: 589 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz